கார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi
Posted by
GEETHA ACHAL
at
Sunday, November 14, 2010
Labels:
இட்லி - Idly,
பருப்பு வகைகள் - தானியங்கள்,
பொடி வகைகள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
கார்ன் மீல் – 3 கப்
உளுத்தம்பருப்பு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· கார்னமீல் + உளுத்தம்பருப்பினை குறைந்தது 1 மணி நேரம் தனி தனியாக ஊறவைத்து கொள்ளவும்.
· மிக்ஸியில் உளுத்தம்பருப்பினை போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
· பிறகு, கார்ன் மீல் சேர்த்து 1 நிமிடம் அரைக்கவும். (பெரியதாக இருந்தால் அரைக்கவும் இல்லையெனில் அரைக்க வேண்டாம்.)
· உளுத்தம்பருப்பு மாவு + கார்ன் மீல் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவினை புளிக்கவிடவும்.
· இட்லி தட்டில், மாவினை ஊற்றி வேகவிடவும்.
· சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சாம்பார், சட்னி, பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கருப்பு உளுந்து இட்லி பொடி
பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கருப்பு உளுந்து – 2 கப்
· காய்ந்த மிளகாய் – 10 - 12
· பூண்டு தோலுடன் – 5 – 6
· பெருங்காயம் – சிறிதளவு
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கருப்பு உளுந்து + காய்ந்தமிளகாயினை தனி தனியாக வறுத்து கொண்டு சிறிது நேரம் ஆறவிடவும்.
மிக்ஸியில் கருப்பு உளுந்து + காய்ந்த மிளகாய் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 3/4 பாகம் அரைத்து கொள்ளவும்.
கடைசியில் இத்துடன், பூண்டு சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும். சுவையான சத்தான இட்லி பொடி ரெடி. இத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)

சிற்றூண்டி – Breakfast
22 comments:
idly yum super.. podi athavida super..
Idly sounds like a cool idea,I always have balck urad dal for making podi,very flavorful!
garnmealnaa enna?
ஆஹா,,வித்தியாசமான இட்லி,வித்தியாசமான பொடி..மிகவும் சத்தானதும் கூட..
Romba nall erukku, time eruntha ennoda blogium vathu parunga n comment sollunga....
http://kurinjikathambam.blogspot.com/
mmm....tasty....!
super!!
இட்லி+பொடி சூப்பராயிருக்கு....
Nice
Cornmeal idly and black urad dal podi looks delicious both together,droolworthy combo..
வித்யாசமான இட்லி+ பொடி ரொம்ப நல்லா இருக்கு
நன்றி ஸ்ரீவித்யா...நன்றி ராஜி...நன்றி கார்த்திக்...கார்ன்மீல் என்பது ரவை மாதிரி இருக்கும்...
நன்றி ஸாதிகா அக்கா....
நன்றி குறிஞ்சி...
நன்றி கௌசல்யா...
நன்றி கீதா...
நன்றி மேனகா...
நன்றி சாரு அக்கா...
நன்றி ப்ரியா...
super geetha.
wow really ahealthy one dear....
super!
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி கஞ்சனா..
நன்றி அகிலா..
நன்றி வானதி...
Romba naal kalicchu oru whole grain recipe...! nice !
Geetha,seems you have made picturing the ingredients as a routine. This has a lot of impact(makes it feel more easy to try) Thankyou !!
ரொம்ப நன்றி அபர்ணா...
Post a Comment